Categories
மாநில செய்திகள்

மாணவர்களே அப்படி செய்யாதீங்க…! பார்த்தாலே பயமா இருக்கு…. அன்பில் மகேஷ் எச்சரிக்கை …!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளி மாணவ மாணவிகள் படியில் பயணம் செய்தால் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களும் மீது நடவடிக்கை ஏற்கனவே எடுத்திருக்கிறார்கள். பள்ளிக்கு குழந்தைகள் வரும் போது பாதுகாப்பாக வரவேண்டும் என்று ஆசைப்படுகிறோம், வீட்டுக்கு செல்லும்போதும் அவர்கள் பாதுகாப்பாக செல்ல வேண்டும் என ஆசைப்படுகிறோம். வெளியில் கேட்டில் நின்று மாணவர்களை உள்ளே வர வளைத்து கதவை மூடுகின்ற வரை நாங்கள் அவர்களை கட்டுபடுத்துகிறோம், ஆனால் உள்ளே வந்ததற்கு பிறகு நம்முடைய ஆசிரியர் மக்கள் மூலமாக அவர்களுக்கு அறிவுரை கண்டிப்பாக வழங்கப்படவேண்டும்.

ஏனென்றால் இளங்கன்று பயமறியாது என்பது போன்று பேருந்துகளில் அவர்கள் தொங்கிக் கொண்டு வருவதை பார்த்தால் அவ்வளவு பயமாக இருக்கிறது. ஆனால் அந்த குழந்தைகளுக்கு நாம் சொல்வது என்னவென்றால் முதலில் வகுப்பறையில் தனித்தனியாக அமர்வது முக்கியம் கிடையாது, அதை நீங்கள் பேருந்திலும் கடைபிடிக்க வேண்டும் என்று சொல்கிறோம். ஆனால் இன்றைக்கு அந்த மாணவர்களிடம் கண்டிப்பாக இதுபோன்ற அபாயங்களை எடுக்க கூடாது என்பது தான் சொல்கிறோம். இனி வருங்காலத்தில் ஆசிரியர்கள் மூலமாக உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்படும்.

ஆசிரியர்களை விகிதப்படி பார்த்தால் கிட்டத்தட்ட 1:21 லெவலுக்கு கொண்டு வந்துருக்கோம், ஆசிரியர்கள் இருக்கிறார்கள், எங்கெல்லாம் அதிகம் தேவைப்படுகிறது. நான் நினைக்கிறேன் சில பள்ளிகளில் 300 பேர் சேருகிறார்கள், சில பள்ளிகளில் 10 பேர் சேருகிறார்கள் இது போன்று ஒரு விகிதம் இருக்கிறது. கண்டிப்பாக இந்த பணிகள் எல்லாம் முடிந்த பிறகு எவ்வளவு தேவையோ அவ்வளவு உறுதி செய்து அதற்கான இடங்களில் நிரப்பப்படும். பள்ளி நேரங்களில் கூடுதல் பேருந்து இயக்குவது குறித்து போக்குவரத்து துறையிடம் கலந்து ஆலோசித்து அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.

Categories

Tech |