தமிழகத்தில் கடந்த மாதம் நல்ல மழை பெய்து வந்தது. ஆனால் இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே மழை குறைய ஆரம்பித்தது. இந்த நிலையில் வடகிழக்கு பருவ காற்று காரணமாக கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி டிசம்பர் 15-ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி காரைக்கால் கடலோர மாவட்டங்கள் மற்றும் தென்மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரியலூர், ஜெயங்கொண்டம், செந்துறை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக நள்ளிரவு பெய்ய தொடங்கிய மழை தற்போது வரை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகம், புதுச்சேரியில் டிசம்பர் 16 வரை 5 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னையில் இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.