கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் செல்ல அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தடுப்பூசி 2 தவணை செலுத்தியவர்கள் மட்டுமே டிச.13-ம் தேதி முதல் மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர் என்றும், கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான ஏதாவது ஓர் சான்றிதழை பக்தர்கள் வழங்கினால் மட்டுமே அனுமதி அளிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இந்த அறிவிப்பை கோயில் நிர்வாகம் வாபஸ் பெற்றது. மேலும், வழக்கம் போல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளது.