டுவிட்டர் இந்தியா வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் நடிகர் விஜய் மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் பற்றி அதிகளவில் கருத்து பரிமாறப்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது.
டுவிட்டர் இந்தியா 2021 ஆம் ஆண்டு டுவிட்டரில் தென்னிந்திய திரைப்படம் பிரபலங்களில் யாரைப்பற்றி அதிகளவில் கருத்துக்கள் பரிமாறப்பட்டது என்பது தொடர்பாக தகவலை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் நடிகைகளில் கீர்த்தி சுரேஷ் முதல் இடம், பூஜா ஹெக்டே 2-வது இடம், சமந்தா 3-வது இடம், காஜல் அகர்வால் 4-வது இடம், மாளவிகா மோகனன் 5-வது இடம், ராகுல் ப்ரீத்சிங் 6-வது இடம், சாய் பல்லவி 7-வது இடம். தமன்னா 8-வது இடம், அனுஷ்கா 9-வது இடம் மற்றும் அனுபமா 10-வது இடம் பிடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதன்பின் நடிகர்களில் விஜய் முதல் இடம், பவன் கல்யாண் 2-வது இடம், மகேஷ் பாபு 3-வது இடம், சூர்யா 4-வது இடம், ஜூனியர் என்.டி.ஆர். 5-வது இடம், அல்லி அர்ஜுன் 6-வது இடம், ரஜினிகாந்த் 7-வது இடம், ராம் சரண் 8-வது இடம், தனுஷ் 9-வது இடம் மற்றும் அஜித் 10-ஆம் இடம் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.