Categories
மாநில செய்திகள்

ரவுடி தப்பிஓட்டம் … தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ள போலீசார்…!!

புதுச்சேரியில் கரும்பு தோட்டத்திற்குள் பதுங்கியிருந்த ரவுடி கும்பலை காவல்துறையினர் பிடிக்க முற்பட்டபோது இரு தரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

கலிதீர்தால்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ரவுடி ஜனா. இவர் மீது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. தலைமறைவாக இருக்கும் ரவுடி ஜனா ஆண்டியார் பாளையம்  கரும்பு தோட்டத்திற்குள் பதுங்கியிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் படி போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

மோதலில் பல ரவுடிகள் தப்பி ஓடிய நிலையில் திருக்கனூரை சேர்ந்த சாத்ராக் என்ற ரவுடி பிடிபட்டான். ரவுடிசாத்ராக்  கொடுத்த தகவலின் பேரில் ரகசிய இடத்தில் பதுக்கி வைத்திருந்த இரண்டு நாட்டு துப்பாக்கிகள், இரண்டு வெடிகுண்டுகள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கூட்டாளிகளுடன் தப்பி ஓடிய ரவுடி கும்பல் தலைவனை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

Categories

Tech |