Categories
உலக செய்திகள்

“கொரோனா மானியம்”… பெண்ணின் துணிகரமான செயல்…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு….!!!

சிங்கப்பூரில் கொரோனா மானியம் பெறுவதற்காக மோசடியில் ஈடுபட்ட இந்திய பெண்ணுக்கு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.

சிங்கப்பூரில் இந்திய பெண் ராஜகோபால் மாலினி வசித்து வருகிறார். இவர் தனியார் கட்டுமான நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இதில் ராஜகோபால் மாலினி அரசு வழங்கும் கொரோனா மானியத்தை பெறுவதற்காக பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டார். மேலும் மாலினி தான் பணிபுரிந்து வந்த கட்டுமான நிறுவனத்தில் இருந்து 4,000 சிங்கப்பூர் டாலரை கையாடல் செய்ததாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து புகாரின்படி ராஜகோபால் மாலினியை காவல்துறையினர் கைது செய்தனர். இதற்கிடையில் மாலினி மீதான வழக்கு சிங்கப்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கின் இறுதி விசாரணை நடந்தபோது ராஜகோபால் மாலினி மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டது. அதன்பின் ராஜகோபால் மாலினிக்கு 16 மாதங்கள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

Categories

Tech |