Categories
மாநில செய்திகள்

மாணவர்களே…! கல்வி உதவித்தொகை பெற வேண்டுமா….? அரசு அதிரடி அறிவிப்பு…!!!!

கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய ஆதி திராவிடர் இன மாணவ மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்பட்டுவரும் மத்திய அரசு நிதி அளவிலான போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம் மற்றும் மாநில அரசு சிறப்பு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம் போன்றவை வரும் 13.12.2021 அன்று முதல் திறக்கப்பட உள்ளது. மேல்கண்ட திட்டங்களின் கீழ் பயன் பெற தகுதி வாய்ந்த ஆதிதிராவிடர் பழங்குடியினர் மற்றும் கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய ஆதி திராவிடர் இன மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

எனவே தகுதி வாய்ந்த மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்களை உரிய முறையில் பூர்த்தி செய்து ஜாதி சான்று, வருமானச் சான்று, மதிப்பெண் சான்று, சேமிப்புக் கணக்கு புத்தகங்கள், ஆதார் எண் உள்ளிட்ட எல்லா ஆவணங்களையும் வரும் ஜனவரி 13-ஆம் தேதிக்குள் கல்வி இணையதள வழி http://escholarship.tn.gov.in/ மூலமாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றது.  மேலும் கல்வி நிறுவனங்கள் மாணவர்களுக்குரிய கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களை உரிய முறையில் பூர்த்தி செய்யவும், மாணவர்கள் சார்பாக விண்ணப்பங்களை எந்த தவறும் இன்றி பதிவேற்றம் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |