Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அதிகரிக்கும் திருட்டு…. ரிக் வண்டி அதிபர்கள் வீட்டில் கைவரிசை…. மர்ம நபர்களுக்கு வலைவீச்சு….!!

ரிக் வண்டி தொழிலதிபர்கள் வீட்டில் 17 பவுன் நகை திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள ஆண்டிபாளையம் பகுதியில் உள்ள எழில் நகரில் பழனிவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ரிக் வண்டி வைத்து தொழில் நடத்தி வருகிறார். இந்நிலையில் பழனிவேல் இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது மர்ம நபர்கள் சிலர் வீட்டிற்குள் புகுந்து பீரோவில் இருந்த 5 பவுன் நகை மற்றும் 10 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்துக்கொண்டு தப்பியோடியுள்ளனர். இதேபோல் ஊஞ்சல்பாளையத்தில் ரிக் வண்டி தொழிலதிபரான லோகநாதன் வீட்டுக்குள் மர்ம நபர்கள் புகுந்துள்ளனர். இதனையடுத்து அவருடைய பீரோவை உடைத்து உள்ளே இருந்த 12 பவுன் நகைகளை திருடி கொண்டு தப்பியோடியுள்ளனர்.

இதனை அறிந்த தொழிலதிபர்கள் 2 பேரும் திருச்செங்கோடு ஊரக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியும், கைரேகை நிபுணர்களை வரவழைத்து அங்கிருந்த தடயங்களை சேகரித்துள்ளனர். மேலும் 2 தினங்களுக்கு ஆண்டிபாளையம் பகுதியில் வசித்து வரும் விஜய் ஆனந்த் என்பவர் வீட்டிலும் வீட்டில் மர்ம நபர்கள் 4 பேர் திருட முயன்று உள்ளனர். அப்போது விஜய் ஆனந்த் விழித்துக்கொண்டு சத்தம் போட்டதால் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர்.

எனவே இந்த திருட்டு சம்பவத்திலும் அதே நபர்கள் ஈடுபட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். இந்நிலையில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து கொள்ளையடித்த மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர்.

Categories

Tech |