Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சட்டபணிகள் ஆணைக்குழு சார்பில்…. நடைபெற்ற மக்கள் நீதிமன்றம்…. 1985 வழக்குகளுக்கு தீர்வு….!!

தேசிய சட்டபணிகள் ஆணைக்குழு சார்பில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் தேசிய சட்டபணிகள் ஆணைக்குழு சார்பில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் நடைபெற்றுள்ளது. இதற்கு மாவட்ட தலைமை நீதிபதி குணசேகரன் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து பாலசுப்பிரமணியம், சுந்தரர், சரவணன், விஜய் அழகிரி, ஹரிஹரன், கபாலீஸ்வரன், ஸ்ரீவித்யா, மாலதி, ரேவதி, ஜெயந்தி, முருகன் ஆகிய நீதிபதிகளின் அமர்வு முன்பு நிலுவையில் உள்ள வழக்குகள் விசாரிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு நீதிமன்றத்தில் விபத்து வழக்குகள், குடும்ப தகராறு, நிலத்தகராறு, முன்பகை தகராறு, காலோசை வழக்குகள், ஜீவம்சம் வழக்குகள், பொது பயன்பட்டு வழக்குகள் ஆகியவற்றுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

இதேபோல் பரமத்தி வேலூர், திருச்செங்கோடு, ராசிபுரம் ஆகிய நீதிமன்றத்திலும் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றுள்ளது. அதன்படி மாவட்டத்தில் மொத்தம் 6,571 வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் இதுவரை 1,985 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சுமார் 18 கோடியே 55 லட்சத்து 38 ஆயிரத்து 833 ரூபாய் பைசல் செய்யபட்டுள்ளது. மேலும் மக்கள் நீதி மன்றத்தில் தீர்வு காணப்படும் வழக்குகள் மேல்முறையீடு செய்ய இயலாது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |