தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய ஒமைக்ரான் கொரோனா வைரஸ் உலக நாடுகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் கடந்த 2ஆம் தேதி ஒமைக்ரான் நுழைந்தது. இதனையடுத்து நாடு முழுவதும் ஆக மொத்தம் 33 பேர் இந்த வைரசுக்கு பாதிப்புக்கு ஆளாகி இருந்தனர்.
இதனைத்தொடர்ந்து ஆந்திராவில் முதல்முறையாக ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் கேரளா மாநிலத்தில் ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது அபுதாபியில் இருந்து கேரளா திரும்பிய அந்த நபருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.