Categories
உலக செய்திகள்

“உக்ரைனை கைப்பற்றினால் அவ்வளவு தான்!”… ரஷ்யாவிற்கு கடும் எச்சரிக்கை விடுத்த பிரபல நாடு….!!

பிரிட்டன் அரசு உக்ரைனை கைப்பற்றினால் ரஷ்யா கடும் விளைவுகளை எதிர்கொள்ள நேரும் என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

பிரிட்டனிலுள்ள லிவர்பூல் நகரத்தில் நேற்று ஜி-7 நாடுகளை சேர்ந்த வெளியுறவுத் துறை அமைச்சர்களின் மாநாடு நடந்தது. அதில், பிரிட்டனின் வெளியுறவுத் துறை அமைச்சரான எலிசபெத் டிரஸ் தெரிவித்துள்ளதாவது, ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது போரிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்.

உக்ரைனை கைப்பற்றும் தீர்மானத்தை ரஷ்யா மேற்கொண்டால், அது மோசமான முடிவாக இருக்கும். அவ்வாறு நடந்தால் ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்கப்படும். உக்ரைன் நாட்டை ரஷ்யாவிடம் இருந்து பாதுகாக்க ஜி-7 நாடுகள் ஒற்றுமை மற்றும் உறுதியுடன் இயங்கும். இந்தப் பிரச்சனை தொடர்பில் ஒருமித்த கருத்து கொண்ட பிற நட்பு நாடுகளும் எங்களோடு சேர்ந்து கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

Categories

Tech |