Categories
தேசிய செய்திகள்

“பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம்”… அரசு ஊழியர்களுக்கு விரைவில்…. செம ஹேப்பி நியூஸ்….!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு 18 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள அகவிலைப்படி பாக்கித் தொகை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு ஓய்வூதியதாரர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக் குழு பரிந்துரையின்படி சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி(Dearness Allowance) 3% அதிகரிக்கப்பட்டது. இதன் மூலமாக 31 சதவீத அகவிலைப்படியுடன் நவம்பர் மாதத்தில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடைக்கும் என கூறப்படுகிறது. இதனிடையில் 28 சதவீதமாக இருந்த அகவிலைப்படி 31 சதவீதமாக அதிகரிக்கபட்டதை தொடர்ந்து வீட்டு வாடகைப்படியையும் உயர்த்த, மத்திய அரசு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் மத்திய அரசு ஊழியர்கள்  இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

எனினும் 3 சதவீத அகவிலைப்படி உயர்வு என்ற அறிவிப்பு வெளியாகி இருந்தாலும், கடந்த 18 மாதங்களாக மத்திய அரசு ஊழியர்களுக்கு, அகவிலைப்படி பாக்கித் தொகை வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பு வெளிவராததால் மத்திய அரசு ஊழியர்கள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து விரைவில் மத்திய அமைச்சக செயலாளர் ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக தெரிகிறது. இந்நிலையில் அகவிலைப்படி பாக்கி தொகை விவகாரம் பிரதமர் நரேந்திர மோடியின் கவனத்திற்கு சென்று விட்டதால், இதுதொடர்பாக அவர் விரைவில் முடிவு எடுப்பார் என்று மத்திய அரசின் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் 18 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள பாக்கித் தொகை குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு ஓய்வூதியதாரர்கள் கடிதம் எழுதியுள்ளனர். அதில் “இந்த விவகாரத்தில் பிரதமர் உடனே தலையிட வேண்டும். மேலும் இதுகுறித்து நடவடிக்கை எடுத்தால் மத்திய அரசு ஊழியர்களின் நீண்ட கால பிரச்சனை தீரும். இதனிடையில் பெட்ரோல், டீசல் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. இந்த சமயத்தில் பாக்கித் தொகை வழங்கினால் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி 18 மாத பாக்கித் தொகை ஒப்புதல் அளித்து விட்டால், 1 கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |