Categories
பல்சுவை

சிலை கடத்தல் தொடர்பான ஆவணங்களை ஒரு வாரத்திற்குள் தமிழக அரசிடம் ஒப்படைக்க பொன்மாணிக்கவேலுக்கு  உத்தரவு…!!

சிலை  தொடர்பான அனைத்து ஆவணங்களையும் அடுத்த மாதத்திற்குள் ஒப்படைக்க வேண்டும் என்று  பொன் மாணிக்கவேலுக்கு  உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக ஓய்வு பெற்ற ஐ.ஜி பொன்மாணிக்கவேலை   நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது .அவரது ஓர் ஆண்டு பதவி காலம் கடந்த மாதம் 30ஆம் தேதியுடன் முடிவடைந்தது. அதை தொடர்ந்து  சிலை வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி இடம் ஒப்படைக்க வேண்டும் என்று தமிழக உள்துறை செயலாளர் உத்தரவிட்டிருந்தார்.

ஆனால் உயர் நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் உத்தரவு இல்லாமல் ஆவணங்களை ஒப்படைக்க முடியாது என்று பொன்மணிக்கவேல் கூறியிருந்தார். இது தொடர்பான வழக்கில் சிலை கடத்தல் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் உயர் அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த நான்காம் தேதி உத்தரவிட்டது. இதையடுத்து தன்னால் விசாரிக்கப்பட்ட சிலை கடத்தல் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களை சிடி வடிவில் உள்ளதாகவும் அதைத் தொகுத்து விரைவில் ஒப்படைக்கப்படும் என்றும் பொன்மணிக்கவேல் விளக்கமளித்துள்ளார்.

இந்த நிலையில் அவர் மீது உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது .அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் தலைமையிலான அமர்வு சிலை கடத்தல் தொடர்பான ஆவணங்களை ஒரு வாரத்திற்குள் தமிழக அரசிடம் ஒப்படைக்க பொன்மாணிக்கவேலுக்கு  உத்தரவு பிறப்பித்தது.

Categories

Tech |