Categories
உலக செய்திகள்

“ஒமைக்ரானை தடுப்பூசி தடுக்குமா”?…. உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட முக்கிய தகவல்….!!!!

உலகம் முழுவதும் கொரோனாவை ஒழிப்பதற்கு ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. எனவே உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. பெரும்பாலான உலக நாடுகள் அனைத்து மக்களுக்கும் 2 தவணை தடுப்பூசி போடும் பணியை நிறைவு செய்வதற்கு அருகில் உள்ளன. சில நாடுகளில் பூஸ்டர் டோஸ் போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தென்னாப்பிரிக்காவில் தோன்றியுள்ள உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது.

மேலும் கொரோனாவில் இந்த ஒமைக்ரான் பிரிவுக்கு எதிராக தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் தடுப்பூசிகள் குறைவான செயல் திறனை தான் கொண்டிருக்கும் எனவும், விஞ்ஞானிகள் சிலர் தெரிவித்துள்ளதால், பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களையும் ஒமைக்ரான் விட்டுவைப்பதில்லை. டெல்டாவை விட வேகமாக பரவும் ஒமைக்ரானை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு உலக நாடுகள் கடுமையான கட்டுப்பாடுகளை மீண்டும் அமல்படுத்தி வருகிறது.

இதை பொறுத்தவரை, அதன் பரவும் தன்மை தடுப்பூசி செயல் திறன் குறித்து, எந்த ஆதாரமும் இல்லை. அதனால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் எனவும், மருத்துவர்கள் சிலர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்தநிலையில், கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசி செயல்படும் விதம் குறித்து உலக சுகாதார நிறுவனம் விளக்கம் தந்துள்ளது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியாவிற்கான இயக்குனர் மருத்துவர் பூனம் பேசுகையில், கொரோனா தற்போது பல பிரிவுகளாக உருவெடுத்து வருகிறது.

அதனால் உலக நாடுகள் கொரோனாவிலிருந்து தடுப்பூசியின் மூலம் விடுபட்டு வருகிறது. எனவே தற்போது செலுத்தப்பட்டு வரும் தடுப்பூசிகள் அதிகம் வருவதற்கான வாய்ப்பைத் தடுக்கும். மேலும் புதிய தொற்றுகள் பரவுவதை முழுமையாக தடுக்காது என்பதை அறிவது முக்கியம் என்றும், அவர் தெரிவித்துள்ளார். அதன் பின்னர், ஒமைக்ரானுக்கு எதிராக தடுப்பூசிகள் மற்றும் பூஸ்டர் தடுப்பூசிகளின் செயல்பாடுகள் குறித்து, மதிப்பீடு செய்யப்பட்டு வருவதாக நோய் தொற்றினால் கடுமையான பாதிப்புகளை எதிர் கொள்ளும் நபர்கள் மற்றும் குறைவான நோய் எதிர்ப்பு திறன் கொண்ட நபர்களுக்கும் தடுப்பூசியின் கூடுதல் தேவைப்படுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |