மதுராந்தகம் ஏரியிலிருந்து மதகுகள் வழியாக நீர் கசிவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர் .
செங்கல்பட்டு மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியாக விளக்கும் மதுராந்தகம் ஏரி 694 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டது. ஏரி முழு கொள்ளளவை எட்ட 4 அங்குலமுள்ளது. இந்த நிலையில் ஏரிகளில் இருந்து நீர் கசிவது விவசாயிகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. தானியங்கி மதகுகளில் துருப்பிடித்து விரிசல் ஏற்பட்டு இருப்பது இதற்கு காரணமாகும். ஏரியை பராமரிப்பதில் அதிகாரிகள் மெத்தனம் காட்டுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும் முழு கொள்ளளவை எட்டும் பட்சத்தில் நீரின் அழுத்தத்தை மதகுகள் தாங்குமா என்று விவசாயிகள் கேள்வி எழுப்பியுள்ளர். மதகுகள் உடனடியாக பராமரிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.