பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட் அணி வெற்றி பெற்றுள்ளது .
பிரீமியர் லீக் கால்பந்து போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் நார்விச் – மான்செஸ்டர் யுனைடெட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.இதில் முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.இதனால் இரு அணிகளும் 0-0 என சமநிலையில் இருந்தது .இதையடுத்து 2-வது பாதி ஆட்டத்தில் 75 -வது நிமிடத்தில் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது .
இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட மான்செஸ்டர் யுனைடெட் அணியில் கிறிஸ்டினா ரொனால்டோ ஒரு கோல் அடித்தார். இதனால்1-0 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் அணி முன்னிலையில் இருந்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் எதிரணி கோல் அடிக்க முயற்சி செய்தது .ஆனால் கோல் அடிக்க முடியவில்லை .இதனால் 1-0 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் யுனைடெட் அணி வெற்றி பெற்றது.