Categories
பல்சுவை

“டிசம்பர் 10” மனித உரிமை என்றால் என்ன…? முழு விளக்கம்…!!

மனித உரிமை என்றால்  என்ன? எவையெல்லாம் அடிப்படை உரிமைகள் என்பது  குறித்து இந்த செய்தித்தொகுப்பில் விரிவாக காண்போம். 

உணவு உடை இருப்பிடம் என்ற மூன்றும் ஒரு மனிதனுடைய வாழ்க்கையின் அத்தியாவசிய தேவைகள் ஆக கருதப்படுகிறது. இந்த மூன்றையும் வைத்து மட்டுமே ஒரு மனிதன் தனது வாழ்க்கை முழுவதையும் கடந்து விட முடியுமா என்று கேட்டால் முடியாது என்றுதான் கூற வேண்டும். இந்த உலகில் பிறந்த ஒவ்வொருவரும் பிறப்பால் சமம்தான்.

ஆனால் இது தெரியாத சிலர் தாங்கள் தான் உயர்ந்தவர்கள் மற்றவர்கள் தாழ்ந்தவர்கள் என்ற மன நோயுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு அவர்கள் கூறிக்கொண்டு மற்றவர்களை அடிமை படுத்துவதோடு மட்டுமல்லாமல் அவர்களது அடிப்படை உரிமைகளையும் பறிக்கவும் செய்கிறார்கள்.  இது போன்றவர்கள் செய்வது தவறு என்பதை புரிய வைப்பதற்காகவும்,

உலகில் பிறப்பால் சமம்தான் என்பதை உணர வைப்பதற்காகவும் அதுமட்டுமல்லாமல் இந்த செயல்கள் மனிதன் கொடுமைப் படுத்தப் பட்டால் அவர்களுக்குத் வேண்டிய வசதிகள் கிடைக்கப் பெறாமல் செய்தாலும் இதுபோன்ற தவறுகளை தடுப்பதற்கு universsal declration of human rights என்ற புத்தகத்தை ஐநா சபை வெளியிட்டது.

இந்த புத்தகத்தில் என்னென்ன விஷயங்கள் மனித உரிமைகள் என்பது குறித்து ஒரு இருபதுக்கும் மேற்பட்ட விஷயங்களை குறிப்பிட்டிருப்பார்கள். இந்த புத்தகம் எதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டது என்றால் பொருளாதாரம் சமூகம் மற்றும் கலாச்சாரம் இந்த மூன்றின் அடிப்படையில் தொகுக்கப்பட்டது. இதன் விஷயங்கள் என்னென்ன பற்றி விரிவாக காண்போம். 

1.அடிப்படை உரிமை 

2.இன நிற மொழி சமயம் அரசியல் கருத்து

  1. வாழ்வுரிமை 

4 யாரும் அடிமை கிடையாது 

5 யாருக்கும் சித்திரவதை அளிக்கக்கூடாது 

6 எவ்விடத்திலும் ஒருவருக்கு உரிமை உண்டு 

7.சட்டத்தின்முன் சம உரிமை வழங்க வேண்டும் 

8 ஞாயம்மற்று தடுத்து வைக்க முடியாது 

9 நீதி வழக்குக்கான உரிமை 

10 குற்றம் நிரூபிக்கப்படும் வரை ஒருவர் நிரபராதி 

11 அந்தரங்க உரிமை 

12 நகர்வு சுதந்திரம் 

13 துன்புறுத்தல் இருந்து புகார் இட உரிமை 

14 தேசியத்துக்கான உரிமை 

15 குடியுரிமை செய்ய உரிமை 

16 சொத்து உரிமை 

17 சிந்தனைச் சுதந்திரம் உணர்வு சுதந்திரம் சமயச் சுதந்திரம் 

18 கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் 

19 கூடல் சுதந்திரம் 

20 மக்களாட்சி உரிமை 

21 சமூக பாதுகாப்பு உரிமை 

22 தொழிலாளர் உரிமை 

23 விளையாட ஓய்வெடுக்க உரிமை 

24 உணவுக்கும் உடைக்கும் ஆன உரிமை 

25 கல்விக்கான உரிமை 

26 பண்பாட்டு பங்களிப்பு உரிமை 

27 நியாய விடுதலை பெற உரிமை 

28 பொறுப்புகளுக்கான உரிமை 

29 மனித உரிமைகளை யாரும் பறிக்க முடியாது

30 இந்த விதிமுறைகளை மீற எந்த நாடுகளுக்கும் எவருக்கும் உரிமை கிடையாது.

Categories

Tech |