Categories
மாநில செய்திகள்

ஹெலிகாப்டர் விபத்து: தவறாக கருத்து பரப்பிய… நாதக கட்சி பிரமுகர் கைது…!!!!

நீலகிரி மாவட்டம் குன்னூர் மலைப்பகுதியில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவருடைய மனைவி உள்ளிட்ட 14 பேர் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியது. இதில் பிபின் ராவத், அவருடைய மனைவி மற்றும் 11 வீரர்களும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

இதனையடுத்து ஹெலிகாப்டர் விபத்து குறித்து தவறாக செய்தி பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஹெலிகாப்டர் விபத்து குறித்து அவதூறு செய்தி பரப்பியதாக நாம் தமிழர் கட்சி விராலிமலை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் பாலசுப்பிரமணியன் கைது செய்யப்பட்டு அவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Categories

Tech |