தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர்களில் ஒருவர் பிரியா பவானி சங்கர். இவருடைய நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் தயாராகி வருகின்றன. முன்னதாக, அதர்வாவுடன் இணைந்து குருதி ஆட்டம், எஸ்.ஜே சூர்யாவுடன் இணைந்து பொம்மை மற்றும் அசோக்செல்வனுடன் இணைந்து ஹாஸ்டல் என பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ள திரைப்படங்கள் நிறைவடைந்து விரைவில் வரிசையாக வெளியாக உள்ளது.
இதையடுத்து, இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்-2 ,சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் திருச்சிற்றம்பலம், சிலம்பரசனின் 10 தல, இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் யானை மற்றும் லாரன்சுடன் இணைந்து ருத்ரன் போன்ற திரைப்படங்களில் தற்போது கதாநாயகியாகவும், முக்கிய கதாபாத்திரத்திலும் பிரியா பவானி நடித்துவருகிறார். பிளட் மணி. எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் மற்றும் நயன்தாராவின் ஐரா படங்களை இயக்கிய இயக்குனர் அர்ஜுன் கே. எம் மணி படத்தை இயக்கியுள்ளார்.
மேலும் பிரியா பவானி சங்கருடன் மெட்ரோ பட நடிகர் சிரிஷ் மற்றும் நடிகர் கிஷோர் சேர்ந்து நடித்துள்ளார். பிளட் மணி திரைப்படத்தை எம்பரர் என்டர்டைன்மென்ட் தயாரிக்க, பாலமுருகன் ஒளிப்பதிவில், சதீஷ் ரகுநாதன் இசையமைத்துள்ளார். இந்த நிலையில், பிரியா பவானி சங்கரின் திரைப்படம் நேரடியாக zee5 ஒரிஜினல் OTT தளத்தில் வருகிற டிசம்பர் மாதம் 24-ஆம் தேதி வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தின் டீசர், ட்ரெய்லர் மற்றும் இதர அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.