Categories
மாநில செய்திகள்

சென்னையின் பல இடங்களில் கொட்டி தீர்த்த கனமழை…. மறுபடியும் முதலில் இருந்தா……!!!!

தலைநகர் சென்னையில் இன்று பல்வேறு இடங்களில் மழை பெய்தது. அதன்படி, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, கோடம்பாக்கம், தியாகராய நகர், பம்மல், ஈக்காட்டுத்தாங்கல், கோட்டூர்புரம்,  ராயப்பேட்டையில் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. மேலும், வடகிழக்கு பருவ காற்று காரணமாக வரும் 16 -ஆம் தேதி வரையில் தமிழ்நாட்டின் அடுத்து ஐந்து நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழையும், உள்மாவட்டங்களில் மிதமான மழை இருக்கக்கூடும் என தகவல் தெரிவித்துள்ளது.  சென்னையை பொறுத்த வரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு என தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |