Categories
மாநில செய்திகள்

மழை வெள்ள பாதிப்பு: 14 துறைகளுக்கு ரூ.300 கோடி ஒதுக்கீடு…. தமிழக அரசு…!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக கடந்த மாதம் நல்ல மழை பெய்தது. இதனால் பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அதிலும் குறிப்பாக சென்னை மழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டது. எனவே தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய,  7 பேர் கொண்ட குழு தமிழகம் வந்து ஆய்வு மேற்கொண்டது.

இந்நிலையில், மழை வெள்ள பாதிப்பை சரி செய்வதற்காக 14 துறைகளுக்கு ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அக்டோபர் 20ம் தேதி முதல் நவம்பர் 14ம் தேதி வரை பெய்த தொடர்மழையினால் ஏற்பட்ட பாதிப்பினை சரி செய்வதற்கு 14 துறைகளுக்கு ரூ.300 கோடி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில் சென்னை மாநகராட்சிக்கு ரூ.132 கோடி ஒதுக்கீடு செய்து  உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |