செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, மாரிதாஸ் மீது யார் கேஸ் கொடுத்தா ? ஒரு கட்சியை சார்ந்த நிர்வாகி புகார் அளித்துள்ளார். இதுதான் கல்யாணராமன் அவர்களுக்கும்… இதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் ? தமிழ்நாட்டில் என்ன சட்ட ஒழுங்கு இருக்கிறது ? மாரிதாஸ் அவர்கள் சொன்னது, நா மட்டும் சொல்லவில்லை.
நேற்று அவருடைய பெயில் வரும்பொழுது மாண்புமிகு நீதிபதி அவர்கள் என்ன சொல்கிறார்கள்…. இதெல்லாம் ஒரு வழக்கு என்று கொண்டு வரீங்களா ? இது வந்து ஒரு கருத்து சுதந்திரம் இல்லையா ? இதே நீதிபதி தான் இதுக்கு முன்னாடி தமிழ்நாட்டில் நாவல் வரும் பொழுது அங்கே கருத்துரிமையை பற்றி இதே நீதிபதி தான் பேசி இருக்கிறார்.
இதனால் என்ன தவறு ? கருத்துரிமை ஒருத்தர் பேசியுள்ளார். நான் இதைவிட மோசமாக… பிபின் ராவத் இறப்பை கொண்டாடுவர்களை நான் உங்களுக்கு காட்டுகிறேன். தயவு செய்து எந்த நண்பர்கள் தொலைக்காட்சியில் போடுவதற்கு தயாராக உள்ளீர்களா ? உள்ளே வாங்க ஸ்க்ரீன்ஷாட் கொடுக்கிறேன். நீங்கள் எடுத்துக் கொண்டுபோய் போடுங்கள் பேரோட நான் சொல்கிறேன் என தெரிவித்தார்.