நீட் தேர்வுக்கு எதிரான மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க கோரி நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், இன்றைக்கு தமிழ்நாட்டில் இருக்கின்ற எந்த மருத்துவ மனைக்குச் என்றாலும் வட இந்தியர்கள் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள் அவர்களுக்கு மருத்துவம் பார்ப்பது தமிழ் நாட்டு மருத்துவ கல்லூரிகளில், தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் பயிலுகின்ற நம்முடைய அண்ணன்மார்கள் நம்முடைய முன்னோர்கள் தான் இன்றைக்கு மருத்துவம் அளித்து கொண்டிருக்கிறார்கள்.
ஆக இந்த நீட் என்பது நம்மை வடிகட்டுவதற்கு, நம்மை மருத்துவத் துறையில் இருந்து அகற்றுவதற்கு, நம் வரிப்பணத்தில், நம்முடைய நிலத்தில், நம்முடைய பகுதியில், நம்முடைய அரசாங்கத்தால் கட்டப்பட்ட மருத்துவ கல்லூரிகளில், நமக்கு இடமளிக்காமல் எங்கேயோ இந்தியா முழுக்க இருக்கின்றவர்களை குறிப்பாக வட இந்தியர்களை கொண்டு வந்து நம்முடைய மாநிலத்தில் இருக்கக்கூடிய மருத்துவக் கல்லூரிகளில் புகுத்தி நம்முடைய படிப்பு உரிமை, கல்வி உரிமை பறிக்கின்ற ஒரு செயலை தான் இந்திய அரசு திட்டமிட்டு செய்திருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இன்றைக்கு சென்னை மருத்துவக் கல்லூரி இருக்கிறது என்று சொன்னால் இந்த மருத்துவ கல்லூரியில் தமிழ்நாட்டை சேர்ந்த மாணவ செல்வங்கள், அங்கே இருக்கின்ற இடங்கள் முழுவதுமாக அவர்கள் படித்து வந்தார்கள், இப்போது அவர்கள் சொல்லுகிறார்கள் முழுவதுமாக உங்களுக்கு இடம் இல்லை நாங்கள் வைத்திருக்கின்ற இந்த தேர்வில் இந்தியாவை சேர்ந்த எந்த மாநிலத்து மாணவர்கள் வேண்டுமானாலும் எழுதலாம்.
அந்த மாணவர்கள் அந்த நீட் தேர்வில் வெற்றி பெற்றால் அவர்களுக்கு தமிழ்நாட்டில் இருக்கின்ற இங்கே இருக்கின்ற அரசு மருத்துவக் கல்லூரிகளில் படிப்பதற்கான உரிமையை நாங்கள் வழங்குவோம் என்று சொன்னால், அந்த இடங்களில் இத்தனை ஆண்டுகாலமாக படித்து வந்த மாணவர்கள் தமிழ்நாட்டு மாணவர்களைத் வெளியேறுகின்ற ஒரு முயற்சி. ஆக நம்முடைய இடங்களை தட்டிப்பறித்து அவர்களுக்கு வழங்குவதற்கு இன்றைக்கு மத்திய அரசாங்கம் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது தான் இந்த தேர்வு முறை.
நம் தங்கை அனிதா உங்களுக்கு தெரியும். அரியலூரில் இருந்து ஒரே ஒரு 8க்கு 10 குடிசையில் வாழ்ந்த ஒரு சகோதரி அரசு உதவி பெறும் கல்வியியல் 1200 மதிப்பெண்களுக்கு 1,170 மதிப்பெண்கள் எடுத்து தந்தை ஒரு மூட்டை தூக்கும் தொழிலாளி, தாய் கண் முன்னே மருத்துவ சிகிச்சை இல்லாமல் இறந்து போனார் அந்த வேட்கையோடு, அந்த வெறியோடு இனி இதுபோன்ற சாவு என்பது நடைபெறக் கூடாது நான் ஒரு மருத்துவராக வேண்டும் என்ற லட்சிய கனவோடும் படித்த அந்த மாணவி செல்வதற்கு இந்த நீட் தேர்வின் மூலம் வெற்றி பெற முடியவில்லை அவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
மொத்த மதிப்பெண் 1200 ஒன்றிலிருந்து பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்து 1170 மதிப்பெண் எடுத்தும் இந்த மத்திய அரசு கொண்டு வந்த நீட் என்கின்ற தேர்வால் நம்முடைய மாணவர்கள் மருத்துவராக முடியவில்லை என்று சொன்னால் இது வடி கட்டுவதற்காக கொண்டு வரப்பட்ட இந்தத் தேர்வு முறை தான். ஆகவேதான் நாம் கேட்கிறோம்….. எங்கள் ஊரில், எங்கள் மொழியில், எங்கள் பண்பாட்டுச் சூழலில், எங்கள் கலாச்சார சூழலில், எங்கள் வாழ்வியல் சூழலில், எங்களுடைய ஆசிரியர்களால் கட்டமைக்கப்படுகின்ற,
உருவாக்கப்படுகின்ற பாடத்திட்டத்தின் கீழ் நாங்கள் படிக்கிறோம், அதில் நாங்கள் தேர்ச்சி பெறும். அதில் எங்கள் மாநில அரசு எங்களுக்கு அந்த மதிப்பெண் அடிப்படையில் இட ஒதுக்கீடு அடிப்படையில் உரிய இடங்களை எங்களுக்கு தந்து கொண்டிருக்கிறார்கள் இதை நீங்கள் ஏன் பறிப்பதற்கு முன் வருகிறீர்கள் என்பதுதான் எனது கேள்வி. ஆனால் இதற்கு பதில் சொல்ல வக்கற்ற மத்திய அரசு ஏதோ சொல்கிறார்கள். ஏதோ சாக்கு சொல்லி என்ன சொல்கிறார்கள் என தெரிவித்தார்.