லியோனார்டு என்ற வால் நட்சத்திரம் நேற்று இரவு பூமிக்கு அருகில் வந்து சென்றுள்ளதாக ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிலையம் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அதாவது பூமிக்கு அருகாமையில் என்று கூறினாலும், அது சுமார் 35 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் தான் பூமியை நெருங்கி வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நமது சூரிய குடும்பத்தில் 3,700 வால் நட்சத்திரங்களை விஞ்ஞானிகள் இதுவரை கண்டுபிடித்துள்ளனர்.
லியோனார்டு வால் நட்சத்திரம் சூரியனை வினாடிக்கு 40 கிலோமீட்டர் என்ற வேகத்தில் சுற்றி வருவதாகவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். மிகப் பிரகாசமான இந்த வால்நட்சத்திரம் சராசரியாக ஒரு வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே தென்படும். மேலும் இந்த முறை சற்று நெருக்கமாக வந்ததால் இரவு 7 மணி 22 நிமிடத்திற்கு வெறும் கண்ணால் அதை நேற்று பார்த்திருக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.