தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. ஆனால் உருமாறிய ஒமைக்ரான் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வர. கிறது இந்த நிலையில் வரும் 15 ஆம் தேதியுடன் தமிழகத்தில் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் தமிழகத்தில் பல கட்டுப்பாடுகள் மற்றும் மேலும் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து இன்று உயர் அதிகாரிகளுடன் முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை பத்து முப்பது மணிக்கு இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒமைக்ரான் அச்சுறுத்தல் இருக்கும் நிலையில் ஊரடங்கு உத்தரவை மேலும் நீட்டிப்பது குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது. கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப் படுமா? அல்லது தற்போதுள்ள நிலையை தொடலாமா? என்று குறித்து இந்த கூட்டத்தில் முதல்வர் ஆலோசனை செய்வார்.