Categories
உலக செய்திகள்

ராணுவ ரகசியங்களை வெளியிட்ட அசாஞ்சே…. 175 ஆண்டுகள் சிறை தண்டனை…. உள்துறை அமைச்சரின் முடிவு என்ன…?

அமெரிக்க ராணுவ ரீதியான ரகசியங்களை வெளியிட்டதாக குற்றம்சாட்டப்பட்டு இங்கிலாந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள விக்கிலீக்ஸ் நிறுவனரான ஜூலியன் அசாஞ்சே அந்நாட்டிற்கு கடத்தப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அமெரிக்க ராணுவ தொடர்பான ரகசியங்களை விக்கிலீக்ஸ் நிறுவனரான ஜூலியன் அசாஞ்சே வெளியிட்டுள்ளார். ஆகையினால் இவர் லண்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதையடுத்து அசாஞ்சே அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்பட்டால் 175 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பதற்கு வாய்ப்புள்ளது.

இந்நிலையில் அசாஞ்சேவின் காதலி அவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், மன அழுத்தத்திற்குள்ளாகியிருப்பதாகவும் மேல்முறையீட்டு மனுவில் தெரிவித்துள்ளார்.

இதனை விசாரணை செய்த நீதிபதிகள் அசாஞ்சேவின் மேல்முறையீட்டு மனுவை இங்கிலாந்து நாட்டின் உள்துறை அமைச்சருக்கு அனுப்புமாறு தெரிவித்துள்ளார். இதனையடுத்து இங்கிலாந்து நாட்டின் உள்துறை அமைச்சர் அசாஞ்சேவை அமெரிக்காவிற்கு நாடு கடத்துவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Categories

Tech |