தமிழகத்தில் 14 மற்றும் 15ம் தேதிக்குப் பிறகு வானிலை குறித்த தகவலை வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாக கடந்த மாதம் கன மழை கொட்டி தீர்த்தது. கடந்த மாதம் பெய்த மழையால் பல்வேறு இடங்களில் மழை நீர் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. நீர் நிலைகள் நிரம்பி வழிந்தன. ஆனால் டிசம்பர் மாதம் தொடக்கம் முதலே மழை குறைய தொடங்கியது. அவ்வப்போது சில இடங்களில் மட்டும் மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் தமிழ்நாடு வானிலை குறித்து வெதர்மேன் பிரதீப் ஜான் ஒரு முக்கிய அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார்.
அதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டில் வரும் டிசம்பர் 14, 15 தேதிகளில் மழை முற்றிலும் குறையும். இப்போது ஆங்காங்கே பெய்து வரும் மழை பின்னர் மொத்தமாக நின்றுவிடும். அதன்பின் குளிர் அதிகரிக்கும். தமிழ் நாட்டின் மற்ற பகுதிகளில் இதே நிலைமை தான் நீடிக்கும். இந்த டிசம்பர் மாதத்தில் சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் நீர் பற்றாக்குறை முடிவுக்கு வரும். அடுத்த மூன்று நான்கு நாட்களுக்கு தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களிலும் தென் சென்னையிலும் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு மழை முற்றிலும் குறையும் என்று வெதர்மேன் தெரிவித்துள்ளார்.