Categories
மாநில செய்திகள்

” வாக்காளர் பட்டியல் மூலம் ஹிந்தி திணிப்பு”…..  வெடித்த புதிய சர்ச்சை…. ஆணையர் விளக்கம்….!!!

கோவை மாநகராட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியாகி இருந்த நிலையில் அதில் ஒருவருடைய பெயர் இந்தியில் இடம்பெற்றிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் கடந்த 9ஆம் தேதி புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை கோவை மாநகராட்சி ஆணையர் வெளியிட்டார். இந்நிலையில் கோவை மாநகராட்சி 69-வார்டுக்கு உட்பட்ட பூத் எண் 842, வரிசை எண் 633-ல் சாய்பாபா காலனி, பாரதி பார்க் 8-வது கிராஸ் பகுதியில் வசிக்கும் வட மாநிலத்தை சேர்ந்த மனோஜ் குமார் மற்றும் அவரது தந்தையான சூரஜ் பெயர்கள் இந்தியில் இடம்பெற்றுள்ளன.

வாக்காளர் பட்டியலில் அவர்கள் பெயர் மற்றும் இந்தியில் இடம்பெற்றிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளதாவது: “ஏற்கனவே சட்டமன்ற தேர்தலில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட வாக்காளர் பட்டியலில் வாக்காளர் மனோஜ்குமார் மற்றும் அவரது தந்தையின் பெயர்கள் இந்தியில் இடம் பெற்று இருந்தது. அதனால் தற்போது கோவை மாநகராட்சி வெளியிட்ட உள்ளாட்சி தேர்தல் பட்டியலும் மாற்றமில்லாமல் அப்படியே வந்து விட்டது. மனோஜ்குமார் விருப்பப்பட்டால் 8-வது படிவம் மூலம் விண்ணப்பித்து, தனது பெயரை தமிழில் மாற்றிக்கொள்ளலாம்” என்று அவர் தெரிவித்தார்.

Categories

Tech |