சூறாவளியினால் மாகாண நீதிபதி உயிரிழந்துவிட்டார் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்காவில் தொடர்ச்சியான சூறாவளிகளால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது . அதிலும் முப்பது சூறாவளிகளால் அங்குள்ள அர்கன்சாஸ், இல்லினாய்ஸ், கென்டகி, மிஸ்சிசிப்பி, மிசோரி மற்றும் டென்னஸ்சி ஆகிய ஆறு மாகாணங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் கென்டகி மாகாணத்தில் உள்ள மெழுகுவர்த்தி ஆலையானது பெரும் சேதமடைந்துள்ளது.
அதிலிருந்த 110 பேரில் 50க்கும் மேலானோர் கென்டகி மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். குறிப்பாக இந்த சூறாவளியினால் 70 முதல் 100 பேர் வரை உயிரிழந்திருக்கக் கூடும் என்று ஆளுநர் ஆண்டி பெஷீர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக அங்கு அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து வீடுகளின் மேற்கூரையானது காற்றில் பறந்து போயுள்ளது.
இந்த பேரிடரினால் 3, 31, 549 பேர் மின் இணைப்பு இல்லாமல் அல்லல்ப்பட்டு வருகின்றனர். மேலும் 2,50,00,000 பேர் பீதியடைந்துள்ளனர். குறிப்பாக இந்த சூறாவளியினால் கென்டகி மாகாண நீதிபதியான பிரையன் கிரிக் உயிரிழந்துவிட்டார் என்று அம்மாவட்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியான ஜான் டி மின்டன் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்படப்பட்டிருந்தது. இதேபோன்று அமெரிக்க கடற்படையைச் சேர்ந்த கிளைடன் கோப் என்பவரும் சூறாவளிக்கு பலியாகியுள்ளார். இதனை அவரின் குடும்பம் உறுதி செய்துள்ளது.