கஞ்சா கடத்திய குற்றத்திற்காக பின்னால் ஊர்காவல் படை வீரரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சிக்கு அரசு பேருந்தில் கஞ்சா கடத்தி வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அந்தியூர் சோதனை சாவடியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அவ்வழியாக வந்த அரசு பேருந்தை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக பேருந்தில் ஒருவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் கஞ்சா இருப்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அந்த நபரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர் மன்னூர் செடி முத்தூர் பகுதியில் வசிக்கும் முன்னால் ஊர்க்காவல் படை வீரரான மூர்த்தி என்பது தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மூர்த்தியை கைது செய்ததோடு அவரிடம் இருந்த 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.