புண்ணாக்கு ஏற்றிக்கொண்டு சென்ற லாரி சாலை தடுப்புசுவரில் மோதி கவிழ்ந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் இருந்து புண்ணாக்கு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாற்றி ஒன்று தேனி மாவட்டம் போடிக்கு வந்துள்ளது. இந்த லாரியை சந்திரன் என்பவர் ஒட்டி வந்துள்ளார். இந்நிலையில் அந்த லாரி போடி அருகே உள்ள அணைக்கரபட்டி விலக்கு பகுதியில் சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது திடீரென லாரி ஓட்டுனரின் கட்டுப்பட்டை இழந்து தாறுமாறாக ஓடியுள்ளார்.
இதனையடுத்து அங்கிருத்த தடுப்பு சுவரில் போது லாரி கவிழ்ந்துள்ளது. இதில் அதிஷ்டவசமாக லாரி டிரைவர் சந்திரன் உயிர் தப்பியுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த போடி தாலுகா காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விபத்தடைந்த லாரியை அப்புறபடுத்தி விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது.