!ஆப்கானிஸ்தானில் பைசாபாத் நகரில் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டிலுள்ள பைசாபாத் நகரிலிருந்து தென்மேற்கில் 131 கிலோ மீட்டர் தூரத்தில் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 15 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என்று தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து இருந்தது. இதன் காரணமாக ஏற்பட்ட பொருள் இழப்புகள் குறித்த விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை என்று தெரிகிறது. இவ்வாறு பைசாபாத் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.