சிம்பு மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பி விட்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்கள் ஒருவராக வலம் வருபவர் சிம்பு . சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ”மாநாடு” திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, இவர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ”வெந்து தணிந்தது காடு” படத்தில் நடித்து வருகிறார்.
சமீபத்தில், சிம்பு திடீர் காய்ச்சல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும், இவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், இவர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பி விட்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். அதில், ”உங்கள் அனைவரின் பிரார்த்தனைகளுக்கும் நன்றி எனவும், குணமடைந்து வருவதாகவும்” பதிவிட்டுள்ளார்.