Categories
மாநில செய்திகள்

பெண்களே…. “இனி மல்லிகை பூவே நெனச்சு கூட பாக்க முடியாது”…. உச்சத்தை தொட்ட விலை….!!!!

பருவ மழை மற்றும் பனிப் பொழிவு காரணமாக பூ விளைச்சல் கடுமையான பாதிப்பை சந்தித்தது. நேற்று ஒரு கிலோ மல்லி  பூ 3,600 ரூபாய்க்கும், முல்லை பூ 2,000 ரூபாய்க்கும் விற்பனையானது.  சென்னை கோயம்பேடு சந்தைக்கு பல மாநிலங்களிலிருந்து பூக்கள் வரும். தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் நவம்பர் மாதம் பெய்த மழை காரணமாக பூக்கள் விளைச்சல் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. இதனால் சந்தைக்கு பூக்கள் வரத்து குறைந்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் கார்த்திகை மாதம் ஐயப்ப பக்தர்கள் விரதம், முகூர்த்த தினம், கிரகப்பிரவேசம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் அதிக அளவில் நடத்தப்படும் என்பதால் காய்கறி மற்றும் பூக்களின் விலை வரலாறு காணாத வகையில் விலை ஏற்றம் அடைந்துள்ளது. நேற்று கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லி பூ- 2,400 முதல் 3,600 ரூபாய்க்கு விற்பனையானது. முல்லை பூ- 2,000, கனகாம்பரம், 800 — 1000, ஜாதி மல்லி 600, ரோஜா 200 — 240 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது

Categories

Tech |