Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு….. “பொங்கல் பரிசு”…. அதிகாரிகள் சொன்ன முக்கிய தகவல்….!!!!

ஆண்டுதோறும் தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசான இலவச வேட்டி, சேலைகள் முதற்கட்டமாக ஈரோடு மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்குவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடம் 20 பொருள்கள் அடங்கிய தொகுப்பு மற்றும் இலவச வேட்டி சேலை முழு கரும்பு ஆகியவை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கும், பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் ஆகியவற்றுடன் பண்டிகை கால சமையலுக்கு தேவையான மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு போன்ற ரேஷன் பொருள்களும்,  இலவச சேலை, வேட்டி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இன்று ஈரோடு மாவட்டம் பல்லடம் தாலுகா அலுவலகத்திற்கு இலவச வேட்டி சேலைகள் கொண்டு வரப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது “ஈரோடு மாவட்டத்திலிருந்து பல்லடத்துக்கு முதற்கட்டமாக 11,500 இலவச வேட்டி, சேலைகள் வந்துள்ளது. படிப்படியாக அனைத்து வேட்டி சேலைகள் வந்தபிறகு மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரையின்படி ஒவ்வொரு ரேஷன் கடைகளுக்கும் அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த இலவச சேலை, வேட்டி பல்லடம் தாலுகாவிற்கு உட்பட்ட 132 ரேஷன் கடைகளை சார்ந்த 77,374 அரிசி அட்டைதாரர்கள் மற்றும் 845 சர்க்கரை அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |