விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று சந்தோச வாய்ப்புகளை சந்திக்கும் நாளாக இருக்கும். தனவரவு திருப்தி தரும் சூழ்நிலையில் இருக்கும். உங்களின் முன்னேற்றத்திற்கு மாற்று இனத்தவர்கள் ஒத்துழைப்பு செய்வார்கள். திருமண பேச்சுக்களால் நல்ல முடிவு கிடைக்கும். இன்று வீண் கவலை கொஞ்சம் இருக்கும். சேமிக்கவேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் அதை செய்ய முடியாத சூழ்நிலை உருவாகும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் சுறுசுறுப்பு காணப்படும். மற்றவர்களை விட கூடுதலாக படிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகும்.
இன்று அதிர்ஷ்ட வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். இந்த வாய்ப்புகள் சரியான வாய்ப்புகளா என்று ஆராய்ந்து பின்னர் பயன்படுத்திக்கொள்ளுங்கள். அதுமட்டுமில்லாமல் இன்று வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். ஆன்மீக பயணம் செல்வீர்கள். ஆன்மீக சுற்றுலாக்கள் செல்லும் பொழுது கொஞ்சம் கவனமாகவே செல்லுங்கள். அது மட்டுமில்லாமல் இன்று சிறு தொகையை நீங்கள் தெய்வதற்காக செலவு செய்ய நேரிடும் அதையும் பார்த்துக் கொள்ளுங்கள்.
இன்று தன வரவு இருந்தாலும் செலவுக்கு பஞ்சம் இருக்காது. அதற்கு ஏற்றார் போல் நீங்கள் நடந்துக் கொள்ளுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுபோலவே இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டால் அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் நீல நிறம்