Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

திருமண நாள் அன்று….. திடீரென மாயமான மணப்பெண்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

திருமண நாளன்று இளம்பெண் காதலனுடன் ஓட்டம் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பூதப்பாண்டி பகுதியில் இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கும் மதுரையை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இவர்களது திருமணம் நேற்று முன்தினம் நடக்கவிருந்தது. இந்நிலையில் திருமணத்தை முன்னிட்டு மணப்பெண்ணின் குடும்பத்தினர் மதுரைக்கு சென்றுள்ளனர். இதனையடுத்து மணப்பெண்ணின் குடும்பத்தினர் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இரவு 1 மணி அளவில் குளியலறைக்கு சென்ற மணப்பெண் நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. அவரை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளது. அதாவது கடந்த 5 ஆண்டுகளாக பக்கத்து வீட்டில் வசிக்கும் என்ஜினியரை இளம்பெண் காதலித்தது தெரியவந்துள்ளது.

இதற்கு இளம்பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து அவரை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து கொடுக்க முடிவெடுத்தனர். இதனால் திருமண நாளன்று இளம்பெண் காதலனுடன் ஓட்டம் பிடித்தது தெரியவந்துள்ளது. இந்நிலையில் மணமகன் குடும்பத்தினர் திருமணத்திற்காக செலவு செய்த தொகையை தரும்படி பெண் வீட்டாரிடம் கேட்டுள்ளனர். அதன்பின் வேறு வழியின்றி பெண் வீட்டாரும் பணத்தைத் தருவதாக ஒப்புக் கொண்டனர். இதனையடுத்து பெண் வீட்டார் ஏமாற்றத்துடன் ஊருக்கு புறப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |