தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் நேற்று தன்னுடைய 72-வது பிறந்த நாளை கொண்டாடினார். எனவே அவருக்கு பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர். எப்போதும்போல ரசிகர்கள் அவருடைய பிறந்தநாளை கொண்டாடுவதற்கு பல ஏற்பாடுகளை செய்து கோலாகலமாக கொண்டாடினார்கள் .
பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் முக ஸ்டாலின், கமல் உள்ளிட்டவர்கள் ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த நிலையில் தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த மத்திய அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், திரைத்துறை மற்றும் விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோருக்கு நடிகர் ரஜினி நன்றி தெரிவித்துள்ளார். மேலும் என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகர்களுக்கும், தமிழக மக்களுக்கும் மனமார்ந்த நன்றி என்று பதிவிட்டுள்ளார்.