Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர இராசிக்கு… “விரோதிகள் விலகிச்செல்லும் நாள்”.. மனம் தைரியமாக காணப்படும்..!!

மகரம் ராசி அன்பர்களே..!! இன்று விரோதிகள் விலகிச்செல்லும் நாளாக இருக்கும். விரயங்கள் தவிர்க்க முடியாததாக அமையும். தொழில் ரீதியாக இன்று பயணங்கள் நீங்கள் செல்ல வேண்டியிருக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். இன்று பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். புதியதாக தொழில் ஆரம்பிப்பதற்கு ஏற்ற சூழலும் இன்று இருக்கும். அரசாங்க அனுகூலம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சாதகமான சூழல் இன்று நிலவும். அதேபோல் வெளியூரில் இருந்து நல்ல தகவல்கள் உங்களுக்கு வந்து சேரும்.

அயல்நாடு செல்வதற்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல செய்திகள் இல்லத்தில் வந்து சேரும். வேலையில்லாத நண்பர்களுக்கு வேலை கிடைக்கும். இன்று மனம் தைரியமாக காணப்படும். துணிச்சலுடன் சில காரியங்களை மேற்கொள்வீர்கள். இன்று கணவன் மனைவி இடையே ஒற்றுமை இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மனமும் அமைதியாக காணப்படும்.

சக மாணவரின் ஒத்துழைப்பும் இருக்கும். கல்வியில் இருந்த தடை விலகி செல்லும். இன்று முக்கியமான பணியை  நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் நீல நிறம்

Categories

Tech |