மீனம் ராசி அன்பர்களே..!! இன்று துணிவும் தன்னம்பிக்கையும் கூடும் நாளாக இருக்கும். தொழில் வளர்ச்சி திருப்திகரமாக இருக்கும். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடி நடைபெறும். கொடுக்கல் வாங்கல்களில் ஏற்பட்ட குறைபாடுகள் அகலும். இன்று உறவினர்கள் வருகை இருக்கும். பிள்ளைகள் எதிர்காலம் கருதி சில முக்கிய முடிவுகளை இன்று எடுக்ககக்கூடும். வழக்குகளில் நிதானமாக போக்கு காணப்படும். எதிர்பாராமல் நடக்கும் சில சம்பவங்களால் நன்மை உண்டாகும். மன குழப்பம் நீங்கும். இன்று எடுக்கக்கூடிய முடிவுகள் தெளிவாக இருக்கும்.
உங்களுடைய சிந்தனை திறன் இன்று அதிகரிக்கும். உங்களைப் பார்த்து மற்றவர்கள் பொறாமைபடக்கூடிய சூழல் இருக்கும், அதை பார்த்துக் கொள்ளுங்கள், உங்கள் உடலில் இன்று வசீகரத் தன்மை கூடும். காதலில் வயப்பட கூடிய சூழல் இருக்கும். திருமண முயற்சி சிறப்பாக கைகூடும். இன்று கணவன் மனைவிக்கு இடையே அன்னியோன்யம் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். ஒற்றுமை இருக்கும். சகோதரர் வகையில் கூட உங்களுக்கு ஆதாயமும் இருக்கும். இன்று மாணவர்கள் கல்வியில் சிறப்பான முன்னேற்றத்தை பெறக்கூடும்.
கல்வியில் ஆர்வம் மிகுந்து இருக்கும். அது மட்டுமில்லாமல் ஆசிரியர்களின் முழு ஒத்துழைப்பு இன்று கிடைக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்ககூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள். அனைத்தும் நல்லபடியாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்