Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

எங்க ஊருக்கு எப்படி வரலாம்….? வாலிபர்களின் வெறிச்செயல்…. போலீஸ் விசாரணை…!!

விவசாயியை அரிவாளால் வெட்டிய 2 வாலிபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தளவாய்புரம் பகுதியில் விவசாயியான நம்பிராஜன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் நம்பிராஜன் வயலுக்கு சென்று விட்டு தனது மொபட்டில் மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். அப்போது நம்பிதலைவன் பட்டயம் பகுதியில் வசிக்கும் ஆறுமுகம், கார்த்திக் ஆகியோர் நம்பிராஜனை வழிமறித்து எங்கள் ஊருக்கு நீ எப்படி வரலாம் என கேட்டு திடீரென தகராறு செய்துள்ளனர்.

மேலும் அவர்கள் நம்பிராஜனை அவதூறாக பேசி அரிவாளால் வெட்டியுள்ளனர். இதனை அடுத்து நம்பிராஜனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்றதால் 2 பேரும் அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து நம்பிராஜன் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவான ஆறுமுகம் மற்றும் கார்த்திக்கை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |