திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு மூன்றாவது மலைச்சாலை ஏற்படுத்தப்படும் என தேவஸ்தானம் உயர் அதிகாரி கூறியுள்ளார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் திருமலை கோவிலுக்கு செல்ல மூன்றாவது நடைபாதை ஏற்படுத்துவது குறித்து தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பா ரெட்டி நேற்று செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அவர் கூறியதாவது, கடப்பாவையும் திருமலையும் இணைக்கும் நடைபாதை ஒன்று அடர்ந்த வனப்பகுதி வழியாக உள்ளது. இந்த மலைப்பகுதியை சீரமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் மேலும் ஏற்கனவே உள்ள இரண்டு நடைபாதைகளும் தற்போது பெய்த கனமழையால் சேதம் அடைந்திருப்பதால் அதனையும் சீர் செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும் அவர் கூறினார். இதற்காக 3 கோடியே 95 லட்சம் செலவாகும் எனவும் இந்த பணி சரியாக மூன்று வாரங்களுக்குள் முடிவடைந்து விடும் எனவும் அவர் கூறியுள்ளார்.