வெல்டிங் பட்டறை தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள புளியங்குடி பகுதியில் வெல்டிங் பட்டறை தொழிலாளியான முருகேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். அதே பகுதியில் சிற்பக்கலை தொழிலாளியான சுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சுந்தரம் மெயின் ரோட்டில் வைத்து ராசுகுட்டி என்பவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனை பார்த்த முருகேசன் ஏன் தேவையில்லாமல் ராசுகுட்டியிடம் வாக்குவாதம் செய்து கொண்டிருக்கிறாய் என சுந்தரத்திடம் கேட்டுள்ளார். அப்போது கோபமடைந்த சுந்தரம் எங்கள் விஷயத்தில் நீ ஏன் தலையிடுகிறார் என கூறி முருகேசனை கீழே தள்ளி விட்டுள்ளார்.
இதனால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் முருகேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முருகேசனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சுந்தரத்தை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.