உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்க வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் விவசாய பிரிவு மாநில பொதுச்செயலாளர் ஆர் எஸ் ராஜன் முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
முதல்வர் முக ஸ்டாலினின் மகனான உதயநிதி ஸ்டாலின் திரைப்பட தயாரிப்பாளராகவும், நடிகராகவும் இருந்தார். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் நின்று வெற்றி பெற்று திமுக எம்எல்ஏ வாகவும் பொறுப்பேற்றுள்ளார். அமைச்சரவையில் உதயநிதிக்கு துறை ஒதுக்கப்படலாம் என்று பேசிக் கொண்டிருந்த போது அப்படி எதுவும் நடக்கவில்லை.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் விவசாய பிரிவு மாநில பொதுச் செயலாளர் ஆர் எஸ் ராஜன் என்பவர் முதல்வர் முக ஸ்டாலினுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக நியமிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.