‘லத்தி சார்ஜ்’ படத்தின் அப்டேட்டை விஷால் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். இயக்குனர் சரவணன் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘வீரமே வாகை சூடும்’. இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரியில் ரிலீசாக உள்ளது. இதனையடுத்து, இயக்குனர் வினோத் குமார் இயக்கத்தில் இவர் நடிக்கும் திரைப்படம் ”லத்தி சார்ஜ்”.
இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை சுனைனா நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் இளைய திலகம் பிரபு நடிக்கிறார். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார். இந்நிலையில், இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து இருப்பதாக விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.