Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கார்த்திகை மாத பெருவிழா…. சிறப்பாக நடைபெற்ற பூஜைகள்…. அலைமோதிய பக்தர்கள்….!!

லட்சுமி நரசிம்மர் கோவிலில் ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் சாமியை  தரிசனம் செய்ய திரண்டு வந்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் இருக்கின்ற 108 திவ்ய தேசங்களில் ஒன்றான சோளிங்கர் பெரிய மலை யோக நரசிம்மர் கோவில் மற்றும் சிறிய மலை யோக ஆஞ்சநேயர் கோவிலில் கார்த்திகை மாத பெருவிழா கோலாகலமாக நடந்து வந்துள்ளது. அதன்பின் நாள்தோறும் மூலவருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை, அலங்காரம் நடைபெற்றும் வந்துள்ளது.

இதனை அடுத்து கார்த்திகைத் திருவிழாவின் 4-வது வாரத்தை முன்னிட்டு  தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்பட 4 மாநிலங்களில் வசிக்கும் ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமியை தரிசனம் செய்துள்ளனர். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி எங்கு பார்த்தாலும் மக்கள் தலைகளாக காணப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து கோவிலின் நுழைவாயின் பகுதியில் தக்கான் குளக்கரையில் இருக்கும் 32 அடி உயர ஆஞ்சநேயருக்கு துளசிமாலை, பல வண்ண மலர்மாலை மற்றும் வட மாலைகள் அணிவித்து நெய்தீபம் ஏற்றியும் பக்தர்கள் வழிபட்டுள்ளனர். மேலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்த காரணத்தினால் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Categories

Tech |