எல்பிஜி சிலிண்டரை முன்பதிவு செய்வதற்கு இனி ஒரே ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் கேஸ் சிலிண்டர் வீடு தேடி வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்பிஜி கேஸ் சிலிண்டர்கள் மக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக இருக்கிறது. இதில் வாடிக்கையாளர்கள் தங்களது செல்போனில் இருந்து ஒரே ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் போதும், கேஸ் சிலிண்டர் வீடு தேடிவந்துவிடும். இந்த சேவையை உண்மையாக இந்தியன் ஆயில் (IOC) தனது வாடிக்கையாளர்களுக்கு அளிக்கிறது. இவ்வாறு மிஸ்டுகால் மூலமாக நாட்டின் எந்தப் பகுதியிலும் உங்கள் எல்பிஜி சிலிண்டரை முன்பதிவு செய்யலாம்.
இந்த வருடம் பிப்ரவரி மாதத்தில் இருந்தே மிஸ்டு கால் மூலமாக எல்பிஜி சிலிண்டர்களை முன்பதிவு செய்யும் வசதியை IOC தொடங்கியது. கடந்த பிப்ரவரி மாதம் அன்று இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்ட ஒரு அறிவிப்பில் “8454955555 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்தால் போதும். இதனையடுத்து எல்பிஜி கேஸ் சிலிண்டர் உங்களின் வீடுதேடி வரும்” என்று தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் புக்கிங் செய்ய வேறு வழிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதாவது IOC, HPCL மற்றும் BPCL வாடிக்கையாளர்கள் SMS மற்றும் Whatsapp மூலமாகவும் எரிவாயு சிலிண்டர்களை முன்பதிவு செய்யலாம். நீங்கள் Indane வாடிக்கையாளராக இருந்தால், உங்கள் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணிலிருந்து 7718955555 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்வதன் மூலமாக LPG எரிவாயு சிலிண்டரை முன்பதிவு செய்யலாம். மேலும் மற்றொரு வழி Whatsapp, REFILL என்று எழுதி 7588888824 என்ற எண்ணில் Whatsapp செய்யலாம். இதன் வாயிலாக கேஸ் சிலிண்டர் உங்கள் வீட்டு வாசலில் டெலிவரி செய்யப்படும்.