மின்சாரம் தாக்கி கேபிள் டி.வி. ஆபரேட்டர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரயண்ட் நகர் பகுதியில் விநாயக சுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கேபிள் டி.வி. ஆபரேட்டராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் விநாயக சுந்தரம் அண்ணாநகர் பகுதியில் உள்ள வீடுகளுக்கு கேபிள் இணைப்பு கொடுக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது மின்வயரில் கேபிள் பட்டு விநாயக சுந்தரத்தின் மீது மின்சாரம் பாய்ந்தது.
இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த விநாயக சுந்தரம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விநாயக சுந்தரத்தின் உடலை உடனடியாக கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.