Categories
சினிமா தமிழ் சினிமா

சபரிமலை பயணத்தை தொடங்கிய சிம்பு …… வைரலாகும் புகைப்படம்…!!!

40 நாட்களாக கடுமையான விரதத்தில் இருந்து வந்த நிலையில், நேற்று மாலை தனது சபரிமலை பயணத்தை தொடங்கினார்.

தாய்லாந்திலிருந்து திரும்பிய நடிகர் சிம்பு, கடந்த 6ந் தேதி சபரிமலை ஐயப்பன் சுவாமி கோவிலுக்கு மாலை அணிந்தார். 40 நாட்களாக கடுமையான விரதத்தில் இருந்து வந்த நிலையில், நேற்று மாலை தனது சபரிமலை பயணத்தை தொடங்கினார். பயணத்தை முடித்து திரும்புவதற்கு 10 நாட்களாகும். கடைசியாக அவர் “வந்தா ராஜாவா தான் வருவான்” என்ற  திரைப்படத்தில் நடித்திருந்தார்.

Image result for சபரிமலை பயணத்தை தொடங்கிய சிம்பு

 

இந்நிலையில் சிம்பு ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான தகவல் வெளியாகியிருக்கிறது. அவர் தனது சபரிமலை ஐயப்பன் சுவாமி பயணம் முடிந்தவுடன், மீண்டும் சிம்பு சினிமா துறையில் தனது வெற்றிகாரமான பயணத்தை தொடங்குவார்  என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. சுரேஷ் காமாட்சி தயாரிப்பில்,இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் “மாநாடு” திரைப்படத்தின் படப்பிடிப்பு  அடுத்தாண்டு ஜனவரி மாதம் 20-ம் தேதி முதல் தொடங்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நடிகை ஹன்சிகா மோத்வானி உடன் இணைந்து நடித்துள்ள “மகா” திரைப்படத்தின் மீதமுள்ள பாகங்களும் இந்த மாதத்தின் இறுதி வாரம் அல்லது ஜனவரி மாதம் முதல் வாரத்திற்குள் முழுமையாக எடுத்து முடிக்கப்படும் எனத் தெரிகின்றது.இந்நிலையில், நடிகர் சிம்பு தலையில் இருமுடி கட்டிக்கொண்டு சபரிமலை ஐயப்பன் சுவாமி கோவிலுக்கு புறப்பட்டு செல்லும் புகைப்படம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகின்றது.

Categories

Tech |