Categories
விளையாட்டு

ரஷ்யாவுக்கு சர்வதேச மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க 4ஆண்டுகள் தடை …!!

சர்வதேசமற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடுவதற்கு    4 ஆண்டுகள் ரஷ்யாவிற்கு  தடை விதிக்கப்பட்டுள்ளது.

2020 கால ஆண்டில் நடக்கவிருக்கும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி , 2022 கால ஆண்டில் நடக்க விருக்கும் பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டி  மற்றும் உலக கோப்பை கால்பந்துபோட்டி  போன்ற  முக்கியமான  போட்டிகளில் விளையாடுவதற்கு ரஷ்யாவிற்கு , உலக ஊக்க மருந்து தடுப்பு மையம் தடை விதித்துள்ளதாக கூறப்படுகிறது . சென்ற  2014ஆம் ஆண்டில் ரஷ்யாவில் உள்ள சோச்சி என்னும் நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெற்றது .

இப்போட்டியில்  பல்வேறு ரஷ்ய வீரர்கள் ஊக்க மருந்து செலுத்தியிருந்தது  தெரியவந்தது. இதனால் ரஷ்ய விளையாட்டு வீரர்கள் ஊக்க மருந்தை பயன்படுத்துவதற்கு , அந்நாட்டு அரசே உடந்தையாக இருந்தது தெரிய வந்தது .  சுவிட்சர்லாந்தின் லாசேன் நகரில் W .A .T .A ., செயற்குழு கூட்டம் ஒன்று நடைபெற்றது . இந்த கூட்டத்தில், W .A .T .A ., விசாரணை குழுவின் அறிவிப்பை ஏற்றுக்கொண்டு , ரஷ்யாவுக்கு 4 ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |